​விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தின் ஒரு பாடலுக்கு ஆடும் நயன்தாரா?

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தின் ஒரு பாடலுக்கு ஆடும் நயன்தாரா?

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘நானும் ரௌடிதான்’. இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இந்தப்படத்தில் இவர்களது ஜோடி அதிகம் பேசப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த ஜோடி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய இருப்பதாக செய்திகல் வெலியாகியுள்ளது. ஆனால், நயன்தாரா கதாநாயகியாக நடிக்காமல், ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ‘தர்மதுரை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு நயன்தாரா நடனம் ஆட இருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பாடலுக்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தேனி அருகே நடந்து வருகிறது. விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடிகை ராதிகா நடிக்கிறார். ’நானும் ரவுடி தான்’ படத்தை தொடர்ந்து இந்தபடத்திலும் ராதிகா விஜய்சேதுபதிக்கு அம்மாவாக நடிக்கவிருப்பது இந்த படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பை தூண்டி வருகிறது.

மூலக்கதை