​பீப் பாடல் விவகாரம்: சிம்பு - அனிருத்துக்கு கோவை போலீஸார் மீண்டும் சம்மன்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​பீப் பாடல் விவகாரம்: சிம்பு  அனிருத்துக்கு கோவை போலீஸார் மீண்டும் சம்மன்

இந்த மனு, நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீப் பாடல் தொடர்பாக, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல்துறையிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கடந்த 12ம் தேதி புகார் மனு அளித்தனர்.

அதன் பேரில் கோவை  ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்பு, அனிருத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 19ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிம்பு, அனிருத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் அவ்வாறு இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் விளக்கக் கடிதம் மட்டுமே அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 2ம் தேதி இருவருக்கும் நேரில் ஆஜராக வேண்டும் என வலியுறுத்தி, கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதனிடையே, முன் ஜாமின் கோரி நடிகர் சிம்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை