10 ஆண்டுகளுக்கு பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தியது அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
10 ஆண்டுகளுக்கு பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தியது அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, 10 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியது.

2006ம் ஆண்டில் இருந்து மாற்றம் செய்யப்படாமல் இருந்த வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்துள்ளதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜேனட் ஏலன் அறிவித்துள்ளார். 

இந்த முடிவு உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு முதலே அமெரிக்காவின் வட்டி விகிதம் கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்ற நிலையிலுள்ளது. 

தற்போது வேலை வாய்ப்புகள் அதிகரித்திருப்பதால் வட்டி உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. கடந்த 7 ஆண்டுகளை ஒப்பிடும் போது, தற்போது அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் மிகக் குறைவாக 5 சதவீதமாகவுள்ளது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

மூலக்கதை