பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு

தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள ஆபாசப் பாடல் விவகாரத்தில், சிம்புவைக் கைது செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 தனிப்படைகளை அமைத்துள்ளனர். 

நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்ந்து உருவாக்கிய பீப் பாடல், சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆபாச பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சிம்பு - அனிருத் மீது பல்வேறு மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

சிம்பு மீது வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், சிம்புவை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். 

அவரைக் கைது செய்வதற்காக, 5 தனிப்படைகளை அமைக்கப்பட்டுள்ளன. சிம்பு, தனது நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் பதுங்கி உள்ளாரா? என சென்னை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.  டில்லி, மும்பை, ஐதராபாத்தில் உள்ள அவரது நண்பர்கள் பட்டியலையும் போலீசார் திரட்டி வருகின்றனர். 

மூலக்கதை