நான் இருப்பதே திமுகவிற்கு மறந்துவிட்டது: சசிகலா பரபரப்பு பேட்டி
சென்னை,சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாளில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினேன். அவர் முதல்வராக இருந்தபோது மக்களுக்காக பாடுபட்டவர். ஏழை குழந்தைகளுக்காக சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர். ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ரேஷன் அரிசி உள்ளிட்டவற்றை வழங்கினார். அதற்கு முன்பு தனியார் நிறுவனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு பிறகுதான் ரேஷன் கடைகளை அரசு ஏற்று நடத்தியது.தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே திமுக பொங்கல் பரிசுத் தொகையை வழங்குகிறது. 2023 ஆம் ஆண்டு பொங்கல் தொகையை வழங்கினார்கள். அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் வழங்கவில்லை. இப்போது தேர்தல் வருவதால் திமுக மீண்டும் பொங்கல் தொகையை மக்களுக்கு வழங்குகிறது. தேர்தல் வரும் போது விலைவாசி உயர்வைக் குறைப்பதாக அரசு நடவடிக்கை எடுக்கிறது.தமிழ், திராவிடம் என்று சொல்லி எத்தனை நாட்கள் மக்களை ஏமாற்ற முடியும்? இப்போது ‘உங்கள் கனவுகளை சொல்லுங்கள்’ என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அப்படியானால் மக்கள் கனவுகள் மட்டும்தான் காண வேண்டுமா? அதிலும் ஒரு சூட்சமம் உள்ளது. அந்த திட்டத்திற்கு தனியார் இடம் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் நமக்கு வாக்களிப்பார்களா என்பதை அறிய திமுக அரசு ஆட்சியை பயன்படுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் திமுக சொன்னதை செய்தது இல்லை. திமுக என்ன நினைக்கிறது? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரியே இல்லை என திமுக நினைக்கிறது. நான் ஒருத்தி இருப்பதையே திமுக மறந்துவிட்டது.இவ்வாறு அவர் பேசினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
