தமிழ்நாட்டில் 'அல்மாண்ட் கிட்' மருந்தை விற்பனை செய்ய தடை
பாட்னா,பீகாா் மாநிலம், ஹாஜிபூா் வைஷாலியில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் நிறுவன தயாரிப்பான, ‘அல்மான்ட் கிட் சிரப்’ மருந்தில், சிறுநீரகங்களைப் பாதிக்கும் ‘எத்திலீன் கிளைகோல்’ அதிகளவு இருப்பது தெரியவந்தது. கொல்கத்தாவின் கிழக்கு மண்டலத்தின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறை, அல்மான்ட் கிட் சிரப்பை தடை செய்து, அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் கடிதம் அனுப்பியது. இதையடுத்து, தெலங்கானாவில் இம்மருந்து விற்பனை செய்ய உடனடியாக தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து புதுச்சேரியிலும் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலும் தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அல்மான்ட் கிட் சிரப்பில் உயிரிழப்பை ஏற்படுத்தும் எதிலீன் கிளைகால் என்ற நச்சுப்பொருள் கலப்படம் கண்டறியப்பட்டுள்ளது; எதிலீன் கிளைகால் என்ற நச்சு வேதிப்பொருள் சிறுநீரகம், மூளை, நுரையீரல் பாதிப்படையும்; இந்த மருந்தின் விநியோகத்தை தடுக்க, மருந்தகங்கள், மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பு; இது தொடர்பான புகார்களை 94458 65400 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்” என்று அரசு தெரிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
