மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசன தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 1-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் ஜூன் மாதத்தில் முழு கொள்ளளவை எட்டி விடும் வேகத்தில் உயர்ந்து வந்தது. இதன் காரணமாக ஜூன் மாதத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்காகவும், ஜூலை 1-ந் தேதி கால்வாய் பாசனத்திற்காகவும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு தண்ணீர் தொடர்ந்து 135 நாட்களுக்கு திறக்கப்படும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதியுடன் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும். அணை நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் கால்வாய் பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேலும் 62 நாட்களுக்கு இந்த தண்ணீர் திறப்பை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் ஜனவரி 15-ந் தேதி மாலை 6 மணிக்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசன தேவைக்காக 8.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
