பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ கோட்பாட்டோடு பயணிப்போம் - ஆதவ் அர்ஜுனா

  தினத்தந்தி
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கோட்பாட்டோடு பயணிப்போம்  ஆதவ் அர்ஜுனா

சென்னை, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “உலக உயிர்களிடையே கொண்டிருக்க வேண்டிய உன்னத பண்பான அறத்தையும், மகத்தான பாதையில் மானுடம் செயல்படுவதற்குத் தேவைப்படும் கடமைகளான பொருளையும், எல்லா தனிமனிதர்களும் கொண்டாட வேண்டிய இன்பத்தையும் வாழ்வாகக் கற்றுக்கொடுத்த தமிழ் நிலத்தின் ஆதியோன் திருவள்ளுவரின் புகழைப் போற்றும் 'திருவள்ளுவர் நாள்' இன்று. மொழி, பண்பாடு, அரசியல் என அனைத்திலும் ஆதிக்கம் நம்மைச் சூழ்ந்திருக்கும் வேளையில், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ கோட்பாட்டோடு பயணிப்போம். 'சமத்துவம், சமய நல்லிணக்கம், சமூகநீதி' என்ற அறிவு ஒளி ஏந்தி, ஆதிக்கத்தை விரட்டியடிப்போம் என்று அறிவுத்திருநாளான இன்று உறுதியேற்போம்.” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை