ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போருக்கு அல்வா கொடுக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்
சென்னை,தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,ஆட்சிக்கு வருவதற்கு முன், ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும் என்று திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 373-ல் முழங்கினீர்களே!மாட்டுப் பொங்கலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் வேளையில், இந்த மாதமாவது அந்தத் தொகையைக் காளை வளர்ப்போர் கண்ணில் காட்டுவீர்களா? கடந்த நான்கரை ஆண்டுகளாக மாதந்தோறும் வழங்காமல் ஏமாற்றி வந்த மொத்த தொகையையும் சேர்த்து தலைக்கு ₹55,000 ஆன நிலையில், எப்போது தான் ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போர் ஒவ்வொருவரிடமும் தாங்கள் பட்ட கடனை அடைப்பீர்கள்?ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போரை நான்கரை வருடங்களாக வஞ்சிக்கும் பாவம் திமுக அரசை சும்மா விடாது! சமத்துவப் பொங்கல் என ஃபோட்டோஷூட் நடத்திவிட்டு, மாதந்தோறும் ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போருக்கு அல்வா கொடுக்கும் திமுக அரசுக்கு ஒட்டுமொத்தமாகக் கடிவாளம் போட்டு அடக்கி வைக்கும் நாள் தொலைவிலில்லை. என தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
