பொங்கல் எதிரொலி... கோயம்பேடு சந்தையில் கரும்பு, மஞ்சள் விற்பனை அமோகம்
சென்னை, பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், தேவையான பாரம்பரியப் பொருட்களை முன்கூட்டியே வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, வெல்லம் போன்றவை பண்டிகையின் முக்கிய அடையாளங்களாக இருப்பதால், அவற்றின் தேவை அதிகரித்துள்ளது. இதையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், கரும்பு, வாழை, மஞ்சள் கொத்து, இஞ்சி, வெல்லம் போன்ற பிற பொங்கல் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் கோயம்பேடு அங்காடி நிர்வாகம் சார்பில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேலும் பல லாரிகளில் கரும்புகள் வந்த வண்ணம் உள்ளன. 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு, கரும்பின் தரத்தைப் பொறுத்து ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒருசிலர் ஒரு கட்டு ரூ.800 வரையிலும் விற்பனை செய்தனர். அதேபோல, மஞ்சள் குலை விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
