பொங்கல் எதிரொலி... எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
சென்னை, நாளை போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. அதன் பின்னர் மாட்டுப்பொங்கல், உழவர் திருநாள், வார விடுமுறை என அடுத்தடுத்து 5 தினங்கள் விடுமுறை வருகிறது. தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட மக்கள் விருப்பப்படுவர். எனவே சென்னையில் தங்கி வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பேருந்துகள், ரெயில்கள் மூலமும் சென்னை நகரை விட்டு புறப்பட்டு கொண்டு இருக்கின்றனர். சிலர் தங்களது சொந்த வாகனங்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பெரும்பாலானவர்கள் பேருந்து மற்றும் ரெயில்கள் மூலம் தங்களது பயணத்தை தொடர்கின்றனர். அந்த வகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களில் குவிந்துள்ளனர். தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களான நெல்லை, அனந்தபுரி, பொதிகை மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது.முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பயணிகள், உடனடி டிக்கெட்டை பெற்றுக்கொண்டு முன்பதிவில்லாத பெட்டிகளில் இடம்பிடிக்க முண்டியடித்துக்கொண்டனர். இதனால் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது. பயணிகள் முண்டியடிப்பதை தவிக்க போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர். வரும் நாட்களிலும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
