தமிழகம் வந்தார் ராகுல் காந்தி; பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்...!
தமிழர் திருநாளான தை முதல்நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை மறுதினம் (15ம் தேதி) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். கர்நாடகாவில் இருந்து ஹெலிகப்டர் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு ராகுல் காந்தி வந்தார். கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் ராகுல் காந்தி மாணவ-மாணவியர் மத்தியில் உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து பள்ளியின் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழாவில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து ராகுல் காந்தி பொங்கல் விழாவில் பங்கேற்கிறார். இந்த பொங்கல் விழாவில் 108 பெண்கள் மண்பானையில் பொங்கல் வைக்கின்றனர். இந்த விழாவில் மாணவ-மாணவியர், பெண்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
