சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னருக்கு நேரில் அழைப்பு: சபாநாயகர் அப்பாவு
நெல்லை,நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட நீதிபதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கவர்னர் பேசியது தவறு. கோர்ட்டு தீர்ப்பையோ, தீர்ப்பு வழங்கிய நீதிபதிையயோ எதிர்த்து தமிழக அரசு செயல்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கக்கூடிய வாய்ப்பை பயன்படுத்தி வருகிறோம். இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் சட்டம் -ஒழுங்கு சரியாக உள்ளது என்று கவர்னர் பலமுறை சொல்லி இருக்கிறார். இப்போது என்ன நோக்கத்திற்காக நீதிபதிக்கு அச்சுறுத்தல் என்று கவர்னர் சொல்கிறார் என தெரியவில்லை. தமிழக அரசும், கவர்னரும் இணக்கமாகத்தான் இருக்கிறோம். அதனால் தான் வருகிற 20-ந் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் நேரில் சென்று முறைப்படி அதற்கான அழைப்பு கொடுக்கப்படும். மத்திய மந்திரி அமித்ஷாவின் ஊழல் குறித்த ஆதாரங்கள் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கையில் இருப்பதாக சொல்லி இருக்கிறார். ஆனால் அமித்ஷா மீது சி.பி.ஐ. ஆதாரங்கள் இருந்தாலும் நடவடிக்கை எடுக்காது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு கலவரம் ஏற்படுத்த நினைப்பவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். தி.மு.க. -பா.ம.க. கூட்டணி தொடர்பாக இரு தலைவர்களும் பேசி நல்ல முடிவு எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
