சதுரகிரி கோவிலுக்கு இன்று பக்தர்கள் செல்ல தடை
விருதுநகர், விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மழை பாதிப்பு அல்லாத சாதாரண நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால், பல பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்வதற்கான வருகை தந்திருந்தனர். ஆனால், வனத்துறையினர் தடை காரணமாக அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
