புதுக்கோட்டை: கடலுக்கு மீன் பிடிக்க சென்று மாயமான மீனவர்கள் மீட்பு
புதுக்கோட்டை, வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கடலில் வழக்கத்தை விட அதிக வேகத்தில் காற்று வீசும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதற்கிடையே, வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலை மீறி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆனால் வெகு நேரமாகியும் அவர்கள் கரை திரும்பவில்லை. இதையடுத்து அவர்களின் உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரின் கடலோர பாதுகாப்புக் குழுமத்தினர் கடலில் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில், பலத்த காற்று காரணமாக படகு கவிழ்ந்ததில் 4 மீனவர்களும் கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்தனர். 16 கடல் மைல் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த மூர்த்தி, மணிகண்டன், விநாயகம் மற்றும் மணி ஆகிய 4 மீனவர்களையும் கடலோர பாதுகாப்புக் குழுமத்தினர் தற்போது பத்திரமாக மீட்டுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
