பெண் கஞ்சா வியாபாரியுடன் மா. சுப்பிரமணியன் புகைப்படம் - அண்ணாமலை விமர்சனம்
சென்னை, தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி ஒருவர், நேற்று முன்தினம், 18 வது முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், தமிழ்நாட்டில் “கஞ்சா நடமாட்டமே இல்லை” என்று கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்களுடனும், இந்தப் பெண் கஞ்சா வியாபாரி புகைப்படம் எடுத்திருக்கிறார். ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளி ஞானசேகரனுடனான புகைப்படத்துக்கு பல காரணங்களைச் சொல்லி மழுப்பிய, அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள், பல முறை கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியுடனான புகைப்படத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? இந்த அழகில், அந்தப் பெண் கஞ்சா வியாபாரி, 196 வது ‘அ’ வட்ட கண்ணகிநகர் திமுக துணை செயலாளர் என்று கூறப்படுகிறது. அமைச்சர்கள் வரை நெருக்கமாக இருக்கும் போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் பாலியல் குற்றவாளிகள், திமுகவை தங்கள் கூடாரமாக வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி ஒருவர், நேற்று முன்தினம், 18 வது முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், தமிழ்நாட்டில் “கஞ்சா நடமாட்டமே இல்லை” என்று கூறிய சுகாதாரத்துறை அமைச்சர்… pic.twitter.com/n8zGKebiZr




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
