ஜனநாயகன் தணிக்கை விவகாரம்: விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கருணாஸ்
சென்னை, நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்க சான்று வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை 21-ந்தேதிக்கு தள்ளிவைத்தது. இதனால் ஜனநாயகம் படம் பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ், இது தொடர்பாக பேசியதாவது; மத்திய அரசு, தனது அதிகார பலத்தை கொண்டு எல்லோரையும் அடிபணிய வைக்க நினைக்கிறார்கள். விஜய் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதால், அரசியல் சூழ்ச்சிக்காக அவரை அடிபணிய வைக்க தணிக்கை குழுவை மத்திய அரசு பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் நிலவுகிறது. நடிகர் விஜய்யை நிர்பந்தப்படுத்த நினைக்கிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக நானும், தென்னிந்திய நடிகர் சங்கமும் துணை நிற்போம்.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
