தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம்: பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது; “பொங்கல் விழாவில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. கொளத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது எனக்கு எனர்ஜி கிடைக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்களே அனைவரிடமும் தெரியப்படுத்துங்கள். இன்று பாஜகவில் இருக்கிறவர்கள் கூட, திமுகவினரை போல யாராலும் வேலை செய்ய முடியாது என கூறுகிறார்கள். 50 சதவீத தேர்தல் பணிகளை நீங்கள் செய்து முடித்துவிட்டீர்கள். இன்னும் 50 சதவீத தேர்தல் பணிகள்தான் நிலுவையில் உள்ளது. நாம் 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று நான் ஏற்கெனவே கூறி இருந்தேன். ஆனால், நீங்கள் ஆற்றும் பணிகளை பார்க்கும்போது, 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு தோன்றுகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்போம்.” இவ்வாறு அவர் பேசினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
