குறள் வாரவிழா: சிறப்பு காணொலியையும், பதாகையினையும் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- "முக்கடல் சூழும் குமரி முனையில், முப்பால் புலவர் வள்ளுவருக்கு முத்தமிழறிஞர் வைத்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவையொட்டி 31.12.2024ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால், “தமிழின் பெருமையை, குறளின் அருமையை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் 'குறள் வாரம்' கொண்டாடப்படும் எனவும் தமிழ்த் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்” எனவும் அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட அறிவிப்பினை செயற்படுத்திடும்பொருட்டு, 2026ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் “குறள் வாரவிழா” கொண்டாடிட ஆணையிடப்பட்டுள்ளது. அவ்வகையில், சேலம், திருச்சிராப்பள்ளி, தேனி, கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் திருக்குறள் நாட்டிய நாடகம் / இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் ஓவியம்/குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெறவுள்ளது. கோயம்புத்தூர், வேலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்கான குறள் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஓவியம், படத்தொகுப்புப் போட்டி நடைபெறவுள்ளது. மதுரை, ஈரோடு, நாமக்கல், திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பார் போற்றும் பட்டிமன்ற நடுவர்கள் தலைமையில் திருக்குறள் சார்ந்த பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. சென்னை, வள்ளுவர் கோட்டத்திலும், மெரினா கடற்கரையிலும் ஜேம்ஸ் வசந்தனின் தமிழோசை நிகழ்ச்சி பெருநகர சென்னை மாநகராட்சி ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ளது. திருப்பூரில் 21.01.2026 புதன்கிழமையன்று அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஆசிரியர்கள் பெரும் அளவில் பங்குபெறும் குறளாசிரியர் மாநாடு (ம) குறள் வினாடி-வினா நிகழ்ச்சிகள் மாவட்ட நிருவாக ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ளன. தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுரைக்கிணங்க, தமிழ் மொழிக்கென்று முதன்முறையாக ஆண்டுதோறும் நடத்தப்பெற்றுவரும் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற 1500 மாணவர்கள் கலந்து கொள்ளும் குறள் மாணவர் மாநாடு கன்னியாகுமரியில் 23.01.2026 மற்றும் 24.01.2026 ஆகிய இரு நாள்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ளன. “திருக்குறள் திருவிழா தமிழ்மக்களுக்கானத் தெவிட்டாதப் பெருவிழா“ என்ற பெருமிதத்துடன் குறள் வாரம் நிகழ்வுகளுக்கென தயாரிக்கப்பட்டுள்ள சிறப்புக் காணொலியையும், நிகழ்வுகளுக்கானப் பதாகையினையும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (10.01.2026) முகாம் அலுவலகத்தில் வெளியிட்டார். இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையர் மற்றும் திருக்குறள் வார விழா நிகழ்வுகளுக்கான சிறப்பு அலுவலர் வீ.ப.ஜெயசீலன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஔவை அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
