சென்சார் விவகாரம்: கமல்ஹாசன் எம்.பி கருத்து
சென்னை,‘ஜனநாயகன்’ மற்றும் ‘பராசக்தி’ திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ‘பராசக்தி’ படத்தில் சில இடங்களில் வசனங்களை மியூட் செய்தும், சில காட்சிகளை நீக்கியும் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறை U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து, ‘பராசக்தி’ திரைப்படம் திட்டமிட்டபடி இன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.ஆனால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த வழக்கு வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சூழலில், வழக்கு தள்ளிப்போனதால் அவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாகி கமல்ஹாசன் எம்.பி வெளியிட்டுள்ள பதிவில்,ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான தருணம் இது. முழு திரைப்படத் துறையும் ஒன்றிணைந்து அரசாங்க தணிக்கைத் துறையுடன் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபட வேண்டும்.சினிமா என்பது ஒரு சூழல் அமைப்பின் கூட்டு முயற்சியாகும். இத்தகைய சீர்திருத்தங்கள் படைப்புச் சுதந்திரத்தை பாதுகாக்கும்.வெளிப்படத்தன்மைக்கும் மரியாதைக்கும் ரசிகர்கள் தகுதியானவர்கள். வெட்டுக்கான எழுத்துப்பூர்வ விளக்கம், காரணம், சான்றிதழ் வழங்கும் விவகாரங்களில் வெளிப்படத்தன்மை அவசியம்.சினிமா என்பது ஒருதனிமனிதனின் உழைப்பு மட்டுமல்ல. சிறு வணிகங்கள் அடங்கிய கூட்டுக் குழுவின் கூட்டு முயற்சியாகும்.இந்திய சினிமா ரசிகர்கள் பகுத்தறிவும் முதிர்ச்சியும் கொண்டவர்கள். என தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
