தியேட்டரில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் - போலீசார் விசாரணை
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல சினிமா தியேட்டரில் நேற்று முன்தினம் கல்லூரி மாணவி ஒருவர் தனது நண்பரோடு உட்கார்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் உட்கார்ந்திருந்த வாலிபர் ஒருவர் தொடர்ந்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். வாலிபரின் பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் ஒருகட்டத்தில் கல்லூரி மாணவி கூச்சல் போட்டார். உடனடியாக சினிமா காட்சி நிறுத்தப்பட்டது. இதையடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் அங்கிருந்து தப்பியோடி தியேட்டரில் உள்ள கழிவறையில் புகுந்துகொண்டார். அவரை பிடித்து தியேட்டர் நிர்வாகத்தினர் அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரது பெயர் ராஜேஷ் (33 வயது) என்று தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
