ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த பெண் - பரபரப்பு சம்பவம்
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் அதிமுக தலைமை நேர்காணல் நடத்தி வருகிறது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொண்டு இன்று அதிமுக அலுவலகத்திற்கு ஜெயலட்சுமி என்ற பெண் வருகை தந்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாகவும், அதற்கான நேர்காணலுக்கு வந்ததாகவும் ஜெயலட்சுமி கூறினார். அப்போது, அதிமுக நிர்வாகிகளுக்கும் அப்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பெண்ணை தலைமை அலுவலகத்தில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
