தென்காசி: சுவீட் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.30 லட்சம் நகை-பணம் கொள்ளை
தென்காசி, தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மகன் முருகேசன் (வயது 30). இவர் ஆழ்வார்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் சுவீட் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார். இதற்காக வீட்டை பூட்டி விட்டு அனைவரும் புறப்பட்டு சென்ற நிலையில், இன்று அதிகாலையில் முருகேசன் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த முருகேசன் ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். முருகேசன் குடும்பத்தினர் வீட்டில் இல்லை என்பதை அறிந்து மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கதவு, வீட்டின் அறைகளில் படிந்திருந்த கைரேகை மாதிரிகளை சேகரித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனிடையே அதே பகுதியில் வசிக்கும் நாலாயிரம் என்ற சலவை தொழிலாளி உள்பட மேலும் 2 பேரின் வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
