கதாநாயகியாக அறிமுகமாகும் 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா' பட்டம் வென்ற அழகி

  தினத்தந்தி
கதாநாயகியாக அறிமுகமாகும் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற அழகி

‘மாத்து வடலாரா' படத்தின் 2 பாகங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர், இயக்குனர் ரித்தேஷ் ராணா. இவர் தற்போது புதிய படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கலக்கி வரும் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த புதிய படத்துக்கு ‘ஜெட்லி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக 2024-ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற அழகியான ரியா சிங்கா கதாநாயகியாக அறிமுகமாகிறார். வெண்ணிலா கிஷோர், அஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கால பைரவா இசையமைக்கிறார். ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென், லாரா தத்தா, ஜீனத் அமன், மக்தா கோட்ஸே, சுமன் ராவ் வரிசையில் சினிமாவுக்கு வந்த புதிய இந்திய அழகியான ரியா சிங்காவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

மூலக்கதை