’அவர் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன்’ - மீனாட்சி சவுத்ரி

  தினத்தந்தி
’அவர் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன்’  மீனாட்சி சவுத்ரி

சென்னை,2024-ம் ஆண்டில் ஆறு படங்களில் நடித்த மீனாட்சி சவுத்ரிக்கு கடந்த ஆண்டு ஒரே ஒரு படம் மட்டுமே நடித்திருந்தார். இருப்பினும், இந்த ஆண்டு மீண்டும் தொடர்ச்சியான படங்களுடன் மகிழ்விக்க அவர் தயாராகி வருகிறார். கடைசியாக துல்கர் சல்மானுடன் 'லக்கி பாஸ்கர்' மற்றும் வெங்கடேஷுடன் 'சங்கராந்திகி வஸ்துனம்' போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்திருந்த இவர், தற்போது நாக சைதன்யாவின் ’விருஷகர்மா’மற்றும் நவீன் பாலிஷெட்டியின் 'அனகனகா ஓக ராஜு’ ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார். இதில், ’அனகனகா ஓக ராஜு’ படம் வருகிற 14-ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இதற்கிடையில், ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட மீனாட்சி சவுத்ரி, பணியாற்ற விரும்பும் இயக்குனர்கள் பற்றி பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில், “ராஜமவுலி, மணிரத்னம் சாருடன் பணியாற்றுவது என் கனவு. நாக் அஸ்வின் சாருடனும் பணியாற்ற விரும்புகிறேன். இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள், சொல்லிக்கொண்டே போகலாம்’ என்றார்.

மூலக்கதை