40 வயதிலும் குறையாத அழகு.. ரகசியத்தை பகிர்ந்த நடிகை காஜல் அகர்வால்
சென்னை, தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பிறகும் தனது வசீகர தோற்றத்தால் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் அதே பளபளப்பு அழகுடன் இளமையாக காட்சி தரும் காஜல் அகர்வால் தனது இளமை அழகின் ரகசியத்தை வெளியிட்டுள்ளார். இந்த வயதிலும் தனது அழகை குறையவிடாமல் பாதுகாத்து வரும் காஜல் அகர்வால், இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-"எனக்கு தற்போது 40 வயது. பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு இடையில் என்னிடம் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை செய்ய சொன்னார்கள். படங்களில் பிசியாக இருந்தாலும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை ஒருபோதும் தவிர்ப்பதில்லை. ஒவ்வொரு நாளும் உடலுக்கு தேவையான உடற்பயிற்சிகளையும் செய்கிறேன். புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடுவேன். தேங்காய் தண்ணீர் என் அன்றாட உணவில் அவசியமாக இருக்கும். பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரைகள் பச்சை காய்கறிகளில் உள்ள ஊட்டசத்துகள் மற்றும் கொட்டைகளில் உள்ள அத்தியாவசிய கொழுப்புகள் ஆகியவற்றிலிருந்து உடனடி ஆற்றல் கிடைக்கிறது. வயதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் உடற்பயிற்சியை தொடர்ந்து பொருட்படுத்தி தவறாமல் செய்து வருகிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
