16 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்த பொல்லார்ட் ...
ஐக்கிய அரபு நாடுகளில் 2025/26 சர்வதேச லீக் டி20 பிரீமியர் தொடர் நடைபெற்றது. அத்தொடரின் இறுதிப்போட்டியில் டெசர்ட் வைப்பர்ஸ் மற்றும் எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெசர்ட் அணி 20 ஓவரில் 182/4 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக கேப்டன் சாம் கரண் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 74* (51) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் பகார் ஜமான் 20, மேக்ஸ் ஹோல்டன் 41, டான் லாரன்ஸ் 23 ரன்கள் எடுத்தார்கள். எம்ஐ அணிக்கு அதிகபட்சமாக பரூக்கி 2 விக்கெட்டுகளை எடுத்தார். 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய எம்ஐ எமிரேட்ஸ் அணிக்கு, வைப்பர்ஸ் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். பவர்-பிளேவிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி திணறியது. நடுவரிசையில் ஷகிப் அல் ஹசன் (36) மற்றும் பொல்லார்ட் (28) ஆகியோர் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துச் சற்று ஆறுதல் அளித்தாலும், வெற்றிக்கு அது போதுமானதாக இல்லை. மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களும் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக எம்.ஐ.எமிரேட்ஸ் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களில் ஆல் அவுட்டானது, டெஸர்ட் வைபர்ஸ் அணி தரப்பில் டேவிட் பெய்ன் மற்றும் நஷீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் டெஸர்ட் வைபர்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் எம்.ஐ.எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தனது முதல் கோப்பையை முத்தமிட்டது. அதன் காரணமாக 2010க்குப்பின் தொடர்ந்து 13 வெற்றிகளுக்குப் பின் முதல் முறையாக பொல்லார்ட் ஒரு டி20 தொடரின் பைனலில் தோல்வியை சந்தித்துள்ளார். கடைசியாக 2010 ஐபிஎல் பைனலில் சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பைக்காக தோற்ற அவர் 16 வருடங்கள் கழித்து இப்போட்டியில் தோற்றது குறிப்பிடத்தக்கது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
