“துருவ நட்சத்திரம்” படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்த கவுதம் மேனன்

  தினத்தந்தி
“துருவ நட்சத்திரம்” படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்த கவுதம் மேனன்

சென்னை, விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பணிகள் 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. 2023-ல் நவம்பர் மாதம் 'துருவ நட்சத்திரம்' வெளியிடப்படவிருந்த நிலையில், படம் வெளியிடுவது தள்ளிப்போவதாக வெளியீட்டுக்கு முந்தைய நாளில் இயக்குநர் கவுதம் மேனன் அறிவித்தார். அதன் பிறகு ரிலீஸ் தேதி குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழுவினர் தெரிவிக்கவில்லை. சூர்யாவை வைத்து 'துருவ நட்சத்திரம்' படத்தை 2010ம் ஆண்டு துவங்கினார் கவுதம் மேனன் . ஆனால் கதையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார். இந்த நிலையில், இப்படம் குறித்த கேள்விக்கு இயக்குநர் கவுதம் மேனன், “துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கான பிரச்னைகள் முடிந்தது. விரைவில், வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார். 12 ஆண்டுகள் கழித்து ரிலீஸான ‘மதகஜராஜா’ மாபெரும் வெற்றியடைந்ததை போல ‘துருவ நட்சத்திரம்’ படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை