ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த 'ஜன நாயகன்’ டிரெய்லர்
துபாய், தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்-யின் கடைசி திரைப்படம் ஜன நாயகன். இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். ஜன நாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதவ் மேனன், மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ஜன நாயகன் திரைப்படம் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. யூடியூப் தளத்தில் இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு பின்னர் பல்வேறு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜன நாயகன் திரைப்படத்தின் டிரெய்லர் சமூகவலைதள டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது. அதன்படி, ஜன நாயகன் டிரெய்லர் வெளியான 20 மணி நேரத்தில் சுமார் 3 கோடி முறை பார்வையிடப்பட்டு ஐக்கிய அமீரகத்தின் டிரெண்டிங் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. ஐக்கிய அமீரகத்தில் வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்கள ரசிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஜன நாயகன் டிரெய்லர் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
