ரச்சிதா நடித்த “99/66” படத்தின் டிரெய்லர் வெளியானது
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் படம் “99/66 தொண்ணூற்று ஒன்பது அறுபத்தியாறு”. இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரச்சித்தா மகாலட்சுமி, ஸ்வேதா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். உப்பு கருவாடு படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் “ஹஸ்கி ஹவுஸ்” படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரும் வெளியிடப்பட்டது. “சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பை கதைக்களமாக கொண்டுள்ளதால் , இப்படத்திற்கு ‘99/66 தொண்ணூற்று ஒன்பது அறுபத்தியாறு’ என்று பெயர் வைத்துள்ளோம்.அந்தக் குடியிருப்பில் அவ்வப்போது நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள், குடியிருப்பு வாசிகளைப் பயமுறுத்திப் பீதி கொள்ள வைக்கிறது. எதனால் அப்படி நடக்கிறது?அதன் பின்னணியில் இருப்பது என்ன? என்பதைச் சபரியும், ரக்சிதாவும், ஸ்வேதாவும், எம்.எஸ்.மூர்த்தியுடன் சேர்ந்து கண்டுபிடிக்க முயல்கிறார்கள். அது முடிந்ததா என்பது திரைக்கதை.” என்று இயக்குனர் எம்.எஸ்.மூர்த்தி தெரிவித்துள்ளார் .A post shared by rachu_vani_❤️ (@_rachu_vanitha_official)




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
