4 கோடி பார்வைகளை கடந்த “பராசக்தி” டிரெய்லர்

  தினத்தந்தி
4 கோடி பார்வைகளை கடந்த “பராசக்தி” டிரெய்லர்

சென்னை, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 10-ந் தேதி ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘பராசக்தி’ படத்தின் ‘அடி அலையே’, ‘ரத்னமாலா’ பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. ‘பராசக்தி’ ​படத்​தில் 60-களின் கால​கட்​டத்​தைக் கொண்டு வர பயன்​படுத்​தப்​பட்டகார்​கள், ரயில், ரயில் நிலைய செட் மற்​றும் அந்​தக்​கால பொருட்​களை வைத்​து, ‘பராசக்​தி’ பட உலகை செட் மூலம் வள்​ளுவர் கோட்​டத்​தில் உயிர்ப்​பித்தனர். இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்தில் 4 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது.என் செந்தமிழைக் காக்க, பெருஞ்சேனை ஒன்று உண்டு A Whooping 40 million+ views for the #Parasakthi trailer in YouTube - The highest ever for a Tamil film in 24 hoursTrailer - https://t.co/YQCZ6sU2V1#ParasakthiFromPongal#ParasakthiFromJan10@siva_kartikeyan… pic.twitter.com/ZJGnX2EtWn

மூலக்கதை