அமெரிக்காவில் இந்திய இளம்பெண் கொடூர கொலை; தப்பிய முன்னாள் நண்பர் தமிழகத்தில் கைது

  தினத்தந்தி
அமெரிக்காவில் இந்திய இளம்பெண் கொடூர கொலை; தப்பிய முன்னாள் நண்பர் தமிழகத்தில் கைது

மேரிலேண்ட், அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் தரவு பகுப்பாய்வு பணியில் ஈடுபட்டு வந்த இந்திய இளம்பெண் நிகிதா ராவ் கொதிஷாலா (வயது 27). தெலுங்கு பேசும் பெண்ணான இவர், கடந்த 2-ந்தேதி காணாமல் போய் விட்டார் என கூறப்படுகிறது. இதுபற்றி முன்னாள் நண்பரான அர்ஜுன் சர்மா (வயது 26) என்பவர் ஹோவர்டு காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்து விட்டு இந்தியாவுக்கு தப்பி விட்டார். இந்நிலையில், கொதிஷாலா கடுமையாக தாக்கப்பட்டு, பல்வேறு முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், கொதிஷாலா படுகொலையில் அர்ஜுனுக்கு தொடர்பு உள்ளது என உறுதி செய்து, சர்வதேச அளவில் அவரை தேட தொடங்கினர். இந்நிலையில், தமிழகத்தில் பதுங்கியிருந்த அர்ஜுன் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரிக்கப்பட உள்ளது. அவரை நாடு கடத்தும் பணியும் நடைபெற உள்ளது. சமீபத்தில் கொதிஷாலா, பணிபுரிந்த நிறுவனத்திடம் இருந்து ஆல்-இன் விருது வாங்கினார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மூலக்கதை