பிரதமர் மோடி 11-ம் தேதி சோம்நாத் கோவிலுக்கு செல்கிறார்
புதுடெல்லி, சோம்நாத் இந்த கம்பீரமான கோவில், நம் நாட்டின் மேற்கு கடற்கரையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபாஸ் பட்டன் என்ற இடத்தில் அமைந்துள்ளது. துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம், நாடு முழுதும் உள்ள 12 ஜோதிர் லிங்கங்கள் பற்றி குறிப்பிடுகிறது. அதில், முதல் ஜோதிர்லிங்கமாக சோம்நாத் சிவலிங்கம் கருதப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை தரிசித்தாலே ஒருவர் பாவங்களிலிருந்து விடுபட்டு, தன் நியாயமான விருப்பங்களை பெற்று, மரணத்திற்கு பின் சொர்க்கத்தை அடையலாம் என்றும் கூறப்படுகிறது. லட்சக்கணக்கானோரின் பக்தியையும், பிரார்த்தனைகளையும் ஈர்த்த இந்த சோம்நாத் கோவில், துரதிருஷ்டவசமாக அழிவை நோக்கமாகக் கொண்ட வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் தாக்கப்பட்டது. பின், அது புத்துயிர் பெற்று மீண்டும் கம்பீரமாக நிற்கிறது.இந்தநிலையில் புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் சுயமரியாதை திருவிழா வருகிற 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடக்கிறது. இந்த திருவிழாவில் ஆன்மீக மற்றும் சமூக நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த கோவிலின் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். எனவே கோவில் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 11-ம் தேதி சோம்நாத் கோவிலுக்கு செல்கிறார். இதை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
மரவள்ளி கிழங்குக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ராமேசுவரம் - தாம்பரம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
கூட்டணி நிலைப்பாடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியது என்ன.?
தகவல் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பாமக சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை - ராமதாஸ்
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
