“திரௌபதி 2” படத்தில் சின்மயி பாடிய பாடல் இருக்காது - இயக்குநர் மோகன் ஜி
சென்னை, 2016 ம் ஆண்டு வெளியான ‘பழைய வண்ணாரபேட்டை’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு ‘திரௌபதி’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது அதன் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றை சின்மயி பாடியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சரித்திர காலப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பித்து அரியலூரில் நிறைவடைந்ததுள்ளது. இப்படத்தின் ‘எம்கோனே’ பாடலை சின்மயி பாடி இருந்தார். இப்படத்தில், பாடியதற்காக சிம்மயிக்கு எதிராக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து மோகன் ஜி படத்தில் பாடியதற்காக சின்மயி மன்னிப்புக்கேட்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், “எம்கோனே பாடல் பாடியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஜிப்ரானை 18 வருடங்களாக எனக்கு தெரியும். அவரது அலுவலகத்தில் இருந்து இந்த பாடலை பாட அழைத்தபோது, வழக்கம் போல சென்று பாடினேன். அப்போது ஜிப்ரான் இல்லை. இப்போதுதான் எல்லாமே புரிய ஆரம்பிக்கிறது. முன்பே தெரிந்திருந்தால் ஒருபோதும் பாடியிருக்க மாட்டேன். எனக்கும் அந்த கொள்கைகளுக்கும் நிறைய முரண் உள்ளது. இதுதான் முழு உண்மை” என்றார்.சின்மயி மன்னிப்பு கேட்ட நிலையில் மோகன் ஜி வெளியிட்ட பதிவில், “என்னுடன் திரௌபதி 2 படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அல்லது யாரையும் குறிவைத்து தாக்க வேண்டாம். என் படம் பேசுவது என் சொந்த சிந்தனை. என்னுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறிவைத்து தாக்குவது கோழைத்தனமாகும்” இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ‘திரௌபதி 2’ படத்தில் சின்மயி பாடிய பாடலிலிருந்து அவரது குரலை நீக்கி, வேறு ஒரு பாடகியைப் பாட வைக்க முடிவு செய்துள்ளதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். இப்படம் வரும் 23ந் தேதி வெளியாக உள்ளது. EMKONEY is TRENDING!From the world of #Draupathi2, your love has taken this song to the top!A @GhibranVaibodha Melodicalhttps://t.co/wBHn0WMGbP@richardrishi @Rakshana1826 @mohandreamer @GhibranVaibodha @Nethajifilm1032 @JaniChiragjani @SureshChandraa @DoneChannel1… pic.twitter.com/IkvStxTITg




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
