புதின் வீட்டின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தவில்லை - டொனால்டு டிரம்ப்
வாஷிங்டன்,உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 411வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். விரைவில் உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ரஷிய அதிபர் புதினின் அதிகாரப்பூர்வ வீடு மீது உக்ரைன் கடந்த 29ம் தேதி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. 91 டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ரஷிய வான் பாதுகாப்பு அமைப்பால் முறியடிக்கப்பட்டன. புதின் வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவருவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் வீட்டின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், புதின் வீட்டின் அருகே ஏதோ நடந்துள்ளது. ஆனால், புதின் வீட்டை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதுபோன்று எங்களுக்கு தெரியவில்லை. புதின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவதை நான் நம்பவில்லை’ என்றார்.




காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
