தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி: சென்னையில் இன்று தொடங்குகிறது

  தினத்தந்தி
தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி: சென்னையில் இன்று தொடங்குகிறது

சென்னை, தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 75-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்த போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் வருகிற 11-ந் தேதி வரை நடக்கிறது. நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள 3 வெளிப்புற மைதானங்களிலும் இந்த போட்டி நடைபெறுகிறது.மொத்தம் 65 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனபெண்கள் பிரிவில் தொடக்க நாளான இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு-மத்தியபிரதேசம் மோதுகின்றன.ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

மூலக்கதை