மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
பிரயாக்ராஜ், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆண்டுதோறும் மகாமேளா நடத்தப்படுகிறது. இந்த மகாமேளா காலத்தில் அங்கு புனித நதியான கங்கை நதியிலும், திரிவேணி சங்கமத்திலும் பெருந்திரளானோர் புனித நீராடுவது வழக்கமாக உள்ளது. தற்போது அங்கு மகாமேளா தொடங்கி நடந்து வருகிறது. மகாமேளாவின்போது பிரயாக்ராஜில் புனித நீராடுவதால் மக்களின் பாவங்கள் நீங்குவதாக நம்பப்படுகிறது. அந்த வகையில், பவுர்ணமி தினமான இன்று பிரயாக்ராஜில் திருவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மகா மேளா நடைபெறும் இடத்தில் 10,000 சதுர அடி பரப்பளவில் பத்து நீராடும் படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் ஒன்பது மிதவைப் பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. அதிகாரிகளின் கூற்றுப்படி, காலை 10 மணி வரை சுமார் 9 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இன்னும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே, மகாமேளா தொடர்பாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; "கங்கை அன்னைக்கு வணக்கம்! புனித யாத்திரைத் தலங்களின் அரசனான பிரயாக்ராஜுக்கு, புனித சங்கமத்தில் நீராடுவதற்காக வருகை தந்துள்ள அனைத்து மரியாதைக்குரிய துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் அனைவருக்கும் அன்பான வரவேற்பும் வாழ்த்துக்களும். கங்கை அன்னை, யமுனை அன்னை மற்றும் சரஸ்வதி அன்னை அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றட்டும். இதுவே எங்கள் பிரார்த்தனை." என்று ஆதித்யநாத் கூறியுள்ளார்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
மரவள்ளி கிழங்குக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ராமேசுவரம் - தாம்பரம் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
கூட்டணி நிலைப்பாடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியது என்ன.?
தகவல் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பாமக சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை - ராமதாஸ்
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
