மதுரை மாவட்டத்தில் 10 துணை வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு
மதுரை மாவட்டத்தில் 10 துணை வட்டாட்சியர்கள் தற்காலிக வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது தொடர்பாக, மதுரை மாவட்ட கலெக்டர் கே.ஜே.பிரவின்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:- மதுரை டாஸ்மாக் உதவி மேலாளர் கு.கமலேஷ், மதுரை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலக தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார். கல்லக்குடி வட்ட வழங்கல் அலுவலர் ஞா.சித்ரகலா, உசிலம்பட்டி தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார். உசிலம்பட்டி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் க.தாணுமூர்த்தி, மதுரை விமான நிலைய விரிவாக்க தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார். மதுரை மேற்கு தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வீ.சுந்தரவேல், மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் அலுவலக தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார். உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக தலைமை உதவியாளர் ரா.தாமோதரன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கழகம் (மதுரை) தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார். மதுரை கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் ச.முகிபாலன், மதுரை நெடுஞ்சாலைகள் அலுவலக தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார். வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஆ.நாகராணி, மதுரை மேற்கு நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார். உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ச.ந.மகேந்திரபாபு, மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார். மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் அ.பிரேம்கிஷோர், மதுரை நெடுஞ்சாலைகள் அலுவலக தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார். மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் ஜெ.கார்த்திகேயன், மதுரை மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் (நில எடுப்பு) தனி வட்டாட்சியராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
