சென்னை: வாகனங்களில் வக்கீல், போலீஸ் ஸ்டிக்கர்கள் அகற்றம் - காவல்துறை அதிரடி நடவடிக்கை
சென்னை, சென்னை பழைய மாமல்லபுரம் சாலை காரப்பாக்கத்தில் பள்ளிக்கரணை போக்குவரத்து உதவியாளர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிலர் போலீஸ், வக்கீல், பிரஸ் உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஸ்டிக்கர்களை தங்கள் வாகனங்களில் ஒட்டியிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, சம்பந்தப்பட்ட துறைகளில் இல்லாத நபர்கள் பலர் இவ்வாறு தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயம், தங்கள் உறவினர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பதாகவும், அதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும் சிலர் கூறினர். இதனை ஏற்க மறுத்த போலீசார், அவர்களின் வாகனங்களில் இருந்த ஸ்டிக்கர்களை அதிரடியாக அகற்றினர். சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் காவல்துறையின் சோதனையில் இருந்து தப்பிக்க இது போன்ற ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்துவதாகவும், சம்பந்தப்பட்ட துறைகளில் பணி செய்பவர்கள் மட்டுமே தங்கள் வாகனங்களில் இத்தகைய ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்றும் அறிவுரை கூறி வாகன ஓட்டிகளை போலீசார் அனுப்பி வைத்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
