இரட்டை திருப்பதி தேவர்பிரான் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
நவதிருப்பதிகளில் 5-வது தலமான இரட்டை திருப்பதி தேவர் பிரான் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் நடந்தது. காலை 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் தேவர் பிரான் அம்பாள்களுடன் முன் மண்டபத்தில் எழுந்தருளினார். கொடி பட்டம் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. கொடிமர பூஜைகள் முடிந்து பிரமோற்சவ விழா கொடியேற்றப்பட்டது. பின்னர் சுவாமி, தாயார்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் ஸ்ரீதர், சந்தானம், வாசு, நிர்வாக அதிகாரி சதீஷ், ஆய்வாளர் நம்பி, அறங்காவலர் குழு தலைவர் கணேசன் என்ற ராமானுஜன், உறுப்பினர்கள் ராமலட்சுமி, காளிமுத்து, செந்தில், கிரிதரன், கள்ளபிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 11 நாட்கள் விழா நடைபெறும். விழா நாட்களில் தினமும் மாலை 5 மணிக்கு சாயரட்சையும் மாலை 5.30 மணிக்கு வாகன சேவையும் நடைபெறும். இந்திர விமானம், சிம்ம வாகனம், அனுமன் வாகனம், சேஷ வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவர் தேவர் பிரான் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஐந்தாம் திருவிழாவில் தேவர் பிரான் மற்றும் செந்தாமரை கண்ணன் கருட சேவை நடைபெறுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
