கும்பகோணம்: நாட்டாற்றில் கலக்கும் கழிவுநீர் - 80 கிராமங்களின் குடிநீர் ஆதாரம் பாதிப்பு
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் காவிரி ஆற்றின் கிளை நதியான அரசலாற்றில் இருந்து நாட்டாறு பிரிந்து, மயிலாடுதுறை மாவட்டத்தின் மாந்தை பகுதியில் மேலும் இரு கிளை நதிகளாக மாறி காரைக்கால் வரை சுமார் 70 கி.மீ. பயணம் செய்து கடலில் கலக்கிறது. இதன் மூலம் 28,000 விவசாய நிலங்கள் பயனடைந்து வருவதோடு, சுமார் 80 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரம் கிடைக்கிறது. இந்த நிலையில், கும்பகோணம் சாக்கோட்டை அருகே உள்ள நாட்டாற்றில், துணை வாய்க்காலில் இருந்து கழிவுநீர் அதிக அளவில் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் நீர் நிறம் மாறி, துர்நாற்றம் வீசுகிறது. மேலும், ஆற்றங்கரை ஓரங்கள் முழுவதும் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் நீர் மாசுபடுவதால் 80 கிராமங்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
