மூலனூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருப்பூர் மாவட்டம், மூலனூர் கொங்கு நகரில் மகா மாரியம்மன், சித்தி விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்ததையடுத்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. யாகசாலை பூஜைகளுக்கு பிறகு கடம் புறப்பாடு நடைபெற்று, பின்னர் கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து சித்தி விநாயகர், மகா மாரியம்மன், கருப்பணசாமி ஆகிய மூலவர் மற்றும் பரிவார ஆலயங்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனையும், மகா தரிசனமும் நடத்தப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் கோவில் சார்பில் அன்னதானமும் நடைபெற்றது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
