கார்த்திகை கடைசி சோமவாரம்.. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
கார்த்திகை மாத சோமவாரம் (திங்கட்கிழமை) சிவனுக்கு உகந்த நாளாகும். சோமவாரத்தில் சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜை செய்து, அதனை கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு வாய்ந்ததாகும். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத சோமவாரத்தில் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோவிலில் கார்த்திகை மாத முதல் 4 சோமவாரங்களில் 108 சங்காபிஷேகம் நடந்தது. கடைசி சோமவாரமான இன்று 1,008 சங்காபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி மதியம் 2 மணியளவில் 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு அலங்கரித்து வைத்து சிவாச்சாரியார்கள் பூஜை நடத்தினர். பின்னர் சிவ மூல மந்திர யாகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மூலவர் வாலீஸ்வரருக்கு 1,008 சங்குகளில் இருந்த புனித நீரை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதே போல் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவ சுவாமிகளுக்கு சங்குகளில் இருந்த புனித நீரை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி சங்காபிஷேகம் நடைபெற்றது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
