கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு 16-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
கோயம்புத்தூர், கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகத்துக்கு இ-மெயில் வாயிலாக நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனடியாக, வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு சிக்கவில்லை. இதனால் அனு வெறும் புரளி என தெரியவந்தது. கடந்த 5 மாதங்களில் 16-வது முறையாக இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டும் மிரட்டல் விடுப்பவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். என்ன காரணத்துக்காக இது போன்ற மிரட்டல் விடுக்கப்படுகிறது என்பதையும் கண்டறிய முடியவில்லை. ‘டார்க் நெட்' வாயிலாக மிரட்டல் விடுப்பதால், ஐ.டி.யை கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளதாகவும், மர்ம நபர்களை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
