நெல்லையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம்- இரண்டு சிறார்கள் உட்பட 3 பேர் கைது
ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா, அரசர்குளம் பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் சில தினங்களுக்கு முன்பு அஸாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்கு சேர்ந்துள்ளனர். திருநெல்வேலியில் வசித்து வரும் அஸாம் மாநிலத்தை சேர்ந்த முகமது மஹ்புல் ஹுசைன் வயது (27), என்பவர் ஹாலோ பிளாக் நிறுவன உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்றுக் கொண்டு அவர்களை வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார். போதிய அடிப்படை வசதிகள் இலாததாலும், சம்பளம் போதாது என்பதாலும் அவர்கள் வேலையில் இருந்து விலகுவதாக கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் நேற்று கேரளா மாநிலத்திற்கு வேலைக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்காக அரசர்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் இருவரும் திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தனர். இதற்கிடையே, அவர்களை செல்போனில் தொடர்பு கொண்ட முகமது மஹ்புல் ஹுசைன் இங்கேயே வேலை செய்யுமாறு மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறிய அவர் பைக்கில் இரண்டு இளம் சிறார்களுடன் சிவந்திபட்டி பகுதியில் நின்றுள்ளார். ஆட்டோ அங்கு சென்றதும் தம்பதி கல்குவாரியில் இருந்து பணத்தை திருடிவிட்டதாக டிரைவரிடம் கூறிய முகமது மஹ்புல் ஹுசைன் அவர்கள் இருவரையும் அங்கிருந்து காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த பெண்ணின் கணவரை தாக்கிய முகமது மஹ்புல் ஹுசைன் உள்பட மூவரும் அவரது கண் எதிரிலேயே அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பல மணி நேரத்திற்கு பின் இருவரையும் ரோட்டு பகுதியில் விட்டுவிட்டு மூவரும் தப்பியோடியிவிட்டனர். பாதிக்கப்பட்ட அந்த பெண் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பியோடிய முகமது மஹ்புல் ஹுசைன் மற்றும் இரண்டு இளம் சிறார்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கணவர் கண் எதிரிலேயே அஸாம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
