தொழில் அதிபரை கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் - 6 பேர் கைது
ராஞ்சி, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரு முகர்ஜி (வயது 65). தொழில் அதிபரான இவர் ஜார்கண்ட் மாநிலத்தின் தில்மி பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு கடந்த வாரம் சென்றார். இந்தநிலையில் அவரையும் அவரது நண்பரையும் மர்ம நபர்கள் கடத்திச் சென்று ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தல் காரர்களை தேடிவந்தனர். தீவிர தேடுதல் வேட்டையில் தொழில் அதிபரையும், அவருடைய நண்பரையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
