சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயிலில் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் இணைந்து பல்லாவரம் ரூட் தல என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்துள்ளனர். இந்த கணக்கை பின்தொடரும் பச்சையப்பன் மற்றும் நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ‘யார் ரூட் தல?’ என்பதில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரெயிலில் பயணம் செய்த பச்சையப்பன், நந்தனம் கல்லூரி மாணவர்கள் இடையே மீண்டும் ரூட் தல தொடர்பாக தகராறு ஏற்பட்டது.இதற்கிடையில் மின்சார ரெயில், குரோம்பேட்டை ரெயில் நிலையம் வந்ததும், 2 கல்லூரி மாணவர்களும் கீழே இறங்கி வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை, நந்தனம் கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படிக்கும் ஆகாஷ் (வயது 18) என்ற மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தனம் கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்களை கைது செய்தனர். இதேபோல் சென்னையில் உள்ள பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரிகளில் படிக்கும் மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, அனுப்பம்பட்டு, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்களும் மின்சார ரெயிலில் பயணிக்கும் போது ரூட் தல பிரச்சினை தொடர்பாக மோதிக்கொள்வது வழக்கம். அனுப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் 2் கல்லூரி மாணவர்களும் மோதிக்கொண்ட சம்பவத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவரான சச்சினை, கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவர் தினமும் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை ரெயில் நிலையத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து வந்த மின்சார ரெயிலில் மாநில கல்லூரி மாணவர்கள் இருப்பதை கண்ட சச்சின், தான் கைதானதுக்கு காரணமானதாக கூறி மாநில கல்லூரி மாணவர்கள் 3 பேரை தாக்கினார். பதிலுக்கு அவர்களும் தாக்கினர். இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் மோதலில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். இது தொடர்பாக சச்சின் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் பாஸ்கர், மோகன்ராஜ், குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
