இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது - அண்ணாமலை
சென்னை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலமாக தமிழ்நாடு மாறி இருப்பது, பாராளுமன்றத்தில், மத்திய சாலைப் போகுவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்துள்ள அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 2021 – 2024 நான்கு ஆண்டுகளில், 2,54,526 சாலை விபத்துகள் தமிழகத்தில் பதிவாகியிருக்கின்றன. நாட்டின் மற்ற எந்த மாநிலங்களிலும், இத்தனை விபத்துகள் ஏற்படவில்லை. தமிழகத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாலை விபத்துக்களால், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 50 பேர் உயிரிழக்கின்றனர். தரமற்ற, சீர்குலைந்த சாலைகள் ஒரு காரணமாக இருந்தாலும், தனது கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிக்க, தெருவுக்குத் தெரு டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறந்து வைத்துள்ள திமுக அரசின் அலட்சியப்போக்கே இதற்கு முக்கியக் காரணம். கட்டுப்பாடற்ற மது மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையால் ஏற்படும் சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுவது, அப்பாவி பொதுமக்களே. ஆனால், திமுக அரசுக்கு மது விற்பனை மூலம் கிடைக்கும் பணமே முக்கியமாகத் தெரிகிறது. போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கவோ, சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்தவோ, பொதுமக்களின் போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதி செய்யவோ இயலாத இந்த கையாலாகாத திமுக அரசு, விரைவில் தூக்கி எறியப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
