மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்தவர் ரத்தினதுரை (வயது 70). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். அன்று நள்ளிரவில் மர்ம நபர்கள் மளிகை கடையின் ஷட்டர் பூட்டை கடப்பாரையால் உடைத்துள்ளனர். ஒரு பகுதி உடைபட்ட நிலையில் மறுபகுதி பூட்டு உடையாததால், ஷட்டரை வளைத்து உள்ளே சென்று பணப்பெட்டியில் வைத்திருந்த 50 பத்து ரூபாய் நாணயங்கள், குளிர் பானங்கள், சிப்ஸ், பிஸ்கட் வகைகள் உள்ளிட்ட சுமார் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர். நேற்று காலையில் வழக்கம் போல் கடையை திறக்க வந்த ரத்தினத்துரை மளிகை கடை உடைக்கப்பட்டு, பொருட்கள் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடையில் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
