சென்னையில் இன்று 743 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது
சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் செல்லப்பிராணிகள் மருத்துவமனைகளில் செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதல் மற்றும் உரிமம் வழங்கும் பணிகள் கடந்த 08.10.2025 அன்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதுநாள்வரை 99,503 செல்லப்பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 55,788 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்லப் பிராணிகளுக்கான உரிமை வழங்குவதற்கு 14.12.2025 இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களின் கோரிக்களை ஏற்றும் இப்பணியை மேலும் சிறப்புடன் மேற்கொள்வதற்கு ஏதுவாகவும் இன்று (12.12.2025) மற்றும் 13.12.2025, 14.12.2025 ஆகிய மூன்று நாட்களுக்கு செல்லப்பிராணிகளுக்கான உரிமம் வழங்கும் சிறப்பு முகாம்கள் 8 இடங்களில் தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்திட திட்டமிடப்பட்டு இன்று நடைபெற்றது. அவ்வாறாக, இன்று 8 இடங்களில் நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான வெறிநாய்க்கடி, நோய்த் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதலுக்கான சிறப்பு முகாமில் 743 செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. மேலும், நாளை மற்றும் நாளை மறுநாட்களும் இச்சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. எனவே, செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் இதனைப் பயன்படுத்தி 14.12.2025க்குள் தங்களின் செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தை கட்டாயம் பெற்றுக் கொண்டு அபராதம் செலுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
